நான் ஏன் அப்படி செய்தேன் என்று தெரியவில்லை- வைரல் வீடியோ குறித்து தனுஷ்

244

தனுஷ் சினிமாவில் பிஸியான ஒரு நடிகர். ஹாலிவுட், கோலிவுட் என மாற்றி மாற்றி நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது VIP 2 பட புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் தனுஷின் ஒரு வீடியோ வைரலாக பரவியது. தெலுங்கு சினிமாவில் ஒரு பேட்டியில், தொகுப்பாளர் கேட்ட கேள்விகளால் கோபப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து கிளம்பிவிட்டார், அந்த வீடியோ வைரலாக பரவியது.

இதுகுறித்து தனுஷ் கூறியிருப்பதாவது, பேட்டியின்போது நான் அப்படி நடந்திருக்கக் கூடாது. தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதற்காக நான் இப்படி நடந்திருக்கக் கூடாது தான். என் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் நான் இரண்டு வாரங்களாக தூங்கவில்லை என்றார்.

SHARE