டிகை சமந்தா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
என் வாழ்க்கையில் எத்தனையோ அதிசயங்கள் நடந்திருக்கின்றன. நாளை என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது. என்றாலும் நல்லது நடக்கும் என்று நினைத்தால் நிச்சயம் நடக்கும்.நான் சூர்யாவின் ரசிகை. எனது கல்லூரி நாட்களில் சூர்யாவை நேரில் பார்க்க முடியுமா என்று எண்ணி இருக்கிறேன். ‘காக்க காக்க’ படம் பார்த்த பிறகு அவரது தீவிர ரசிகையாகி விட்டேன். எப்போதும் கல்லூரி கலை விழாக்களில் கடைசி இருக்கையில்தான் உட்கார்ந்திருப்பேன்.
ஒருமுறை சூர்யா எங்கள் கல்லூரிக்கு வந்தார். நான் முன் வரிசையில் இடம் பிடித்து ‘சூர்யா… சூர்யா…’ என்று கூச்சல் போட்டு கலாட்டா செய்ததை பார்த்து என் தோழிகளே அசந்து போய் விட்டார்கள். இப்போது நான் சூர்யாவின் ஜோடியாக நடித்து விட்டேன். இது போன்ற அதிசயங்கள் எல்லோருக்கும் நடக்கும். கனவு நனவாகும் காலம் வரும்.
தமிழ் படங்களில் முதல் முறையாக எனது சொந்த குரலில் பேசி இருக்கிறேன். தமிழ் எனது சொந்த மொழி. விரைவில் தெலுங்கு படங்களிலும் சொந்த குரலில் பேசுவேன்.இவ்வாறு அவர் கூறினார்