நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என்பதால் தான் பதவி விலகப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்வதற்கும் தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்மீது கடும் ஆத்திரமடைந்துள்ள விரக்தியடைந்த சோசலிஸ்ட்களே அவன்ட்கார்டே தொடர்பில் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
எனக்கு அவன்ட் கார்டே நிறுவனத்துடன் சிறிய தொடாபும் கிடையாது, எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு சிறிய காரணம் கூட கிடையாது. நான் அந்த நிறுவனத்தின் சார்பில் என்றும் பேசவில்லை.
பாராளுமன்றத்தில் சட்ட- மா- அதிபர் திணைக்களத்தின் சார்பாகவே நான் பேசினேன். நான் பேசியது அனைத்தும் உண்மையே, எனக்கு கீழ் உள்ள சட்டமா அதிபர் திணைக்களம் சரியானவிதத்தில் செயற்பட்டிருந்தால் அந்த அரச அதிகாரிகளை பாதுகாக்கவேண்டியது எனது கடமை.
அரசாங்கத்தை விமர்சிப்பது எதிர்கட்சிகளின் கடமை. ஆனால் அரசாங்கமே அதனை செய்தால் அது குழப்பநிலையை ஏற்படுத்துவதாக அமையும். என்னால் அதனை அனுமதிக்க முடியாது எனது நிலைப்பாடு மாறாது.
நீதியமைச்சு இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளாது. பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வார்கள். ஆகவே நான் பதவி விலகவும் மாட்டேன், 67000 மக்களை படுகொலை செய்தவர்களிடமிருந்து உத்தரவுகளை பெறவும் மாட்டேன். அவர்கள் என்ன தெரிவித்தாலும் சரி எனது பதவியை துறக்கும் அளவிற்கு எனது மனநிலை பாதிக்கப்படவில்லை.
கடந்h காலங்களில் அவர்கள் கோத்தபாய ராஜபக்ச சிறந்தவர் என தெரிவித்தனர். அவர் நாட்டை காப்பாற்றினார் என்றனர். அதே அமைச்சர்களே இன்று அவரை கைது செய்யவேண்டும் என்கின்றனர். அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யவேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கி;ன்றனர். அவர் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஓழிப்பதற்கு உதவினார் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். அனுரகுமாரபோன்றவர்கள் கோத்தபாய பயங்கரவாதி என காண்பிக்க முனைகின்றனர் அதனை நான் அனுமதிக்க மாட்டேன் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.