நான் மீண்டும் வருவேன் ஒலிம்பிக்கில் கால்முறிந்த பிரான்ஸ் வீரர் நம்பிக்கை

276

பிரேசில் நாட்டில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

அது போல ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டி ரியோ மாநகரில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Samir Ait (26). தன்னுடைய திறமையை நிரூபிக்க வேகமாக ஓடிவந்து பெட்டகத்தின் மேல் ஏறி, கீழே வந்த போது யாரும் எதிர்பாராத வகையில், அவரது இடது காலின் முட்டி பகுதி முறிந்தது.

இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர், தனது கால்பகுதியை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார், அதுமட்டுமின்றி நான் மீண்டும் அரங்கில் நுழைவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“எல்லோரும் நம்பிக்கையுடன் இருங்கள், எனக்காக வருந்திய அனைவருக்கும் நன்றி. குணமான கால்களுடன் நான் திரும்பி வருவேன், ஐ லவ் யூ” என கூறியுள்ளார்.

SHARE