இளம் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தொடர்பில் பல்வேறு தகவல்கள் தினம் தினம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அண்மைக் காலமாக நாமலினால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள், ஊழல், மோசடிகள் என்பன வெளியாகி, அவரின் அரசியல் இருப்பை ஆட்டங்காண வைத்துள்ளது.
இந்நிலையில் தனது சகோதரான நாமல் ராஜபக்ஷவுக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளதாக ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் மீது பல பெண்களுக்கு அதிக ஈர்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
என் மீது பல பெண்களுக்கு அதிக ஈர்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் என்னுடைய தோழிகளும் அண்ணன் நாமலுடன் நெருக்கமாகி விடுகின்றனர்.
அண்ணனின் தோழிகளும் எனக்கு நண்பிகளே என ரோஹித தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, ரோஹித இந்த தகவலை வெளியிட்டார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரோஹித ராஜபக்ஷவும் அவரின் காதலியும் இணைந்து நடித்து வெளியிட்ட காதல் பாடல் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.