நாமலின் அதிசொகுசு போர்ட் முஸ்டாங் கார் நேற்று கைப்பற்றப்பட்டது.

161

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும், அதிசொகுசு காரொன்றை, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர், நேற்று திங்கட்கிழமை கைப்பற்றினர்.

இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை இரவு கருத்து தெரிவித்துள்ளார்.

“நாமல் ராஜபக்ஷ, அனுமதிப் பத்திரத்துடன் பெற்ற வாகனம் அது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனம் கொள்வனவு செய்தார்கள் அல்லவா, அந்த வாகனம் தான் அது. பின்னர் அதனை அவர் விற்றுள்ளார்.

இப்போது, அது வேறு ஒரு உரிமையாளரிடம் உள்ளது. இப்படி வந்து வாகனத்தை எடுத்துச் செல்வார்கள் என அந்த நபருக்கு தெரிந்திருக்காது.

தற்போது, நாட்டில் சட்டம் இப்படியாக உள்ளது.

நாளை காலை உங்கள் வீட்டுக்கு வந்து, உங்கள் கமெராக்களை அவை உங்களுடையது இல்லை என்று சொல்லி தூக்கிச் செல்லலாம். ஊடகங்களுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளது.

ஊடகங்கள் என்று ஊடகங்கள் கதைப்பதில்லை. ஊடக நிறுவனத்தில் தலைவரை கொண்டு வந்து ஏசுவார்கள். நான் அவ்வாறு செய்யவில்லை. ஊடக நிறுவனத்தின் தலைவர்களிடம் கேட்டு பாருங்கள் நான் அவ்வாறு செய்தேனா என்று?.ஆனால் இவர்கள் சொல்லுவார்கள்.

ஊடக ஆசிரியரிடம் (எடிட்டர்) பேசி, அல்லது பெயர் சொல்லி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேனா என்று வேண்டுமென்றால் அவர்களிடம் கேட்டு பாருங்கள்” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் போர்ட் முஸ்டாங் ( ford mustang) வகையைச் சேர்ந்த காரே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தக் கார், 2010ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அன்றிலிருந்து சுமார் 6 வருடங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டதன் பின்னர் மற்றொருவருக்கு அக்கார் விற்கப்பட்டுள்ளது.

காரின் தற்போதைய உரிமையாளரிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னரே, அக்காரை கைப்பற்றியுள்ளனர்.mr-car

SHARE