நாமலின் கைதை பார்கிலும் மஹிந்தவுக்கு கிடைத்த பாரிய வெற்றி! விபரம் உள்ளே

267

Mahinda-Rajapaksa

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவை இன்று மாலை பார்வையிட சென்ற மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்பதற்கு முற்பட்டனர்.

எனினும், கேள்வி கேட்பதற்கு முன்னரே “உங்களுக்கு இப்போது சந்தோசமா”?’ என ஊடகங்களை நோக்கி மஹிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் தனது மகன் கைது செய்யப்பட்டதை பார்க்கிலும், பாரிய வெற்றி இன்று உயர்நீதி மன்றில் கிடைத்ததாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தாக்கல் செத்த மனுவினால் வட் வரி சட்டரீதியற்ற ஒன்று என தெரிவித்து, குறித்த வரியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது மிகவும் சந்தோசமான விடயம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாமலின் கைதானது முற்றிலும் அரசியல் பழிவாங்களே.

அன்று கைது செய்யப்பட்ட முஸம்மில் இன்னும் சிறையில் உள்ளார். இன்னும் எமது ஆட்களை சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதனை, நாங்கள் முன்கூட்டியே அறிந்துள்ளதோடு, தற்போது இலங்கையில் சட்டம் ஒரு சாரருக்கு மட்டுமே அமுல்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

advertisement
SHARE