நாமல் ராஜபக்சவின் தாயாரது வேண்டுதல்!

268

27-1422342278-rajapaksa-wife-6508

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தையின் ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட சில நிதி மோசடிகள் சம்பந்தமாக இன்று கைது செய்யப்பட்டார்.

நாமலின் கைது மற்றும் அவரது கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் சிங்கள் இணையத்தளம் ஒன்று செய்தி ஒன்றை பிரசுரித்திருந்தது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதுவரை பொறுமை காக்காது தற்புகழ்ச்சி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, மிகவும் மகிழ்ச்சியுடனேயே சிறைச்சாலைக்கு சென்றார்.

பல வருடங்களாக தந்தையின் அரச அதிகாரத்தை பயன்படுத்தி நாமல் ராஜபக்ச மோசடிகள், ஊழல்கள், பொறுக்கி தனங்களில் ஈடுபட்டு சல்லாப வாழ்க்கையை வாழ்ந்தார்.

சிறை வாழ்க்கையிலேனும் படிப்பினைகளை கற்றுக்கொள்ள முடியுமா என்றும் பொறுமையின்றி, மகிழ்ச்சியில் சில மாதங்களை கழித்தார்.

கெமராக்கள் முன் தோன்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சிறைக்குச் செல்ல தான் தயாராகவே இருப்பதாக நாமல் கூறி வந்தார். பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரை விட அவர் செய்ததை அவரே நன்கு அறிந்திருந்ததே இதற்கு காரணம்.

சுதந்திரமாக சில வருடங்கள் சிறையில் இருந்து தனது வாழ்க்கையை கட்டியெழுப்பிக்கொள்ள விடுத்த கோரிக்கை நிறைவேற்றிக்கொடுக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச மற்றைய தந்தையர்களை போல் அல்ல, அடுத்ததாக தனது மகன் நாமல் ராஜபக்ச சிறைக்கு செல்வார் எனக் கூறி வந்தார். அது உண்மைதான்.

தான் சென்ற வழியில் சென்று கொள்ளையிட்ட மகனை அப்பாவை தவிர அறிந்த நபர் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். எனினும் தனது மகனை விற்றாவது, நாளுக்கு நாள் அதளபாதளத்திற்கு செல்லும் தனது அரசியல் முகாமை தற்காத்து கொள்ளும் தேவை மகிந்தவுக்கு இருக்கின்றது.

இது மெதமுலன மகிந்தவுக்காக உயிரை கொடுத்து செயற்பட்டு இறுதியில் கொலையான சண்டி மல்லி சொல்லி கொடுத்த பாடமாகும்.

தற்போதாவது நாமலுக்கு தடையேற்படுத்த வேண்டாம். தந்தை காரணமாக தனதாக்கி கொண்ட அல்லாப சல்லாப, சண்டித்தன வாழ்க்கையில் இருந்து நல்ல மனிதாக மாற நாமலுக்கு இடமளியுளுங்கள் என்ற நாமலின் தாயாராது வேண்டுதலை நாங்கள் நன்கு அறிவோம்.

நாமலின் கடந்த காலம் மற்றும் அவரது குடும்பத்தின் விந்தைகளை நாங்கள் அறிவோம்.

நாமல் ராஜபக்சவின் தாய் ஷிரந்தி ராஜபக்ச தனது மகனுக்காக செய்த அர்ப்பணிப்புகள், தேவைகளை பூர்த்தி செய்த செய்தவற்றை நாங்கள் அறிவோம். நாமல் திருந்தி வரும் வரை அவரது பெயரை விற்பனை செய்யாதிருப்போம் என அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது

SHARE