நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா விமானப்படைக்கு 50 மில்லியன் ரூபா கடன் குறித்து விசாரணை!

281
namal-rajapaksha
உள்நாட்டுப் பயணங்களுக்கு விமானங்களைப் பயன்படுத்தியதற்கான கட்டணமாக, 50 மில்லியன் ரூபாவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறிலங்கா விமானப்படைக்குச் செலுத்த வேண்டியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பாரிய நிதி மோசடிகள், மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணைகளிலேயே, நாமல் ராஜபக்ச செலுத்த வேண்டிய 50 மில்லியன் ரூபா விமானக் கட்டணங்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளன.

முன்னைய ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு விமானப் பயணங்களுக்காக விமானப்படை விமானங்களை அவர் வாடகைக்கு அமர்த்தியதற்கான கட்டணங்களே செலுத்தப்படாமல் உள்ளன.

சுமார் 150 உள்நாட்டுப் பயணங்களுக்கு நாமல் ராஜபக்ச விமானங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்தளவு பாரிய தொகையை நாமல் ராஜபக்சவிடம் இருந்து எவ்வாறு விமானப்படைக்குப் பெற்றுக்கொடுக்கலாம் என்று, அதிபர் ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது,

நாமல் இலங்கை விமானப்படைக்கு செலுத்திய 50 மில்லியன் ரூபா தொடர்பில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலங்கையின் விமானப்படை விமானங்களை தாம் பயன்படுத்தியமைக்காக, சுமார் 50 மில்லியன் ரூபாய்களை செலுத்தியமை குறித்து விசாரணை
நடத்தப்படவுள்ளது.

பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது

நாமல் ராஜபக்ச, எவ்வாறு இந்தளவு பணத்தை தனித்து செலுத்தியிருக்கமுடியும் என்ற அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாமல் ராஜபக்ச முன்னைய அரசாங்க காலத்தின் போது 150 உள்ளுர் சேவைகளை பயன்படுத்தினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

SHARE