நாமல் ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் Ford Mustang மோட்டார் வானம் தொடர்பில் சர்ச்சை நிலை நீடிக்கிறது.

226

150807112510_namal_rajapaksa_624x351_bbc_nocredit

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் Ford Mustang மோட்டார் வானம் தொடர்பில் சர்ச்சை நிலை நீடிக்கிறது.

பல்வேறு மோசடிகளை மேற்கொண்டு Ford Mustang மோட்டார் வானத்தை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதற்காக நாமல் ராஜபக்ஷ பாரிய முறைக்கேடுகள் பலவற்றை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

சுங்க பிரிவு மற்றும் திரைச்சேரிக்கு செலுத்த வேண்டிய வரி செலுத்தாமை, சொத்துக்களை மறைத்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் ஊடாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Ford Mustang மோட்டார் வாகனம் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் பெறுமதி 9 மில்லியன் ரூபா என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கு கப்பல் கட்டணம் சுங்க மூலம் அறிவிடப்படும் என்ஜின் திறன் 2000த்திற்கு அதிகம் என்றால் 100 சதவீத வரி அறிவிடப்படும். அதன் திறன் 3000 என்றால் 125 வீதமாகும்.

எனினும் Ford Mustang வாகத்தின் என்ஜின் திறன் 5000த்திற்கும் அதிகமான மதிப்பை கொண்டுள்ளது. அதற்கமைய அது மோட்டர் பந்தய காரிற்கு மதிப்பிடப்படுகின்றது. அவ்வாறான மோட்டார் வாகனத்திற்கு அறவிப்படும் இறக்குமதி வரி 300 சதவீதமாகும்.

அதற்கமைய நாமல் ராஜபக்ச Ford Mustang வாகனத்தின் இறக்குமதியையும் உள்ளடக்கப்பட்டதன் பின்னர் வாகனத்தின் இறுதி விலை 450 இலட்சம் ரூபாவாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரி விலக்கு வாகன அனுமதிப் பத்திரத்துக்கு 2000 என்ஜின் திறன் மற்றும் CIF பெறுமதி 50,000 டொலராகும். எனினும் Ford Mustang வாகனத்தின் CIF விலை ஒரு இலட்சம் டொலராகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமாக இருந்த Ford Mustang ரக மோட்டார் வாகனம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் கீழ் கைப்பற்றப்பட்டதன் பின்னர் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாமல் ராஜபக்சவினால் கொண்டுவரப்பட்ட இந்த மோட்டார் வாகனம் பின்னர் பாதாள உலத குழு உறுப்பினர் என கூறப்படும் ஜீ போய் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு கிடைத்த வரி விலக்கு வாகன அனுமதிப் பத்திரத்திரத்தின் ஊடாக இந்த மோட்டார் வாகனத்தை கொள்வனவு செய்ததாகவும் பின்னர் அதனை வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ததாகவும் நாமல் ராஜபக்சவின் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE