நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ முறைகேடான வகையில் சம்பாதித்ததாக கூறப்படும் 125 மில்லியன் நிதி மோசடிக்கு உதவியமை சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் தேடப்படும் மேலும் இரண்டு பெண் பணிப்பாளர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அழைத்திருந்த பூஜானி போகொல்லாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்ட மற்றுமொரு பணிப்பாளரான நித்தியா சேனானி சமரநாயக்க கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஸவின் இரண்டு நிறுவனங்கள் ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணப் பரிவர்தனைக்கு உதவியதாக கூறப்படும் இந்த நிறுவனங்களில் பணிப்புரிந்து நான்கு பெண் பணிப்பாளர்களை வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைத்திருந்தது.
இந்த நான்கு பேரில் இரண்டு பேர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் அனுமதியை பெற்று வெளிநாடுகளில் உள்ள அவர்களில் விலாசங்களுக்கு அழைப்பாணை அனுப்ப உள்ளதாகவும் அவர்கள் வரவில்லை என்றால், அதற்கு அப்பாலான சட்ட நடவடிக்கையை எடுக்க நிதி மோசடி விசாரணைப் பிரிவு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.