நாமல் ராஜபக்ஸ திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

250

namal-rajapaksha

தான் திருமணம் முடித்தால் தற்போதைய ஆட்சியாளர்கள் என்னுடைய மனைவியையும் தூக்கிச் செல்வார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தான் இன்னும் திருமண பந்தத்தில் இணையாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கான அனுமதியுடன் தான் கொள்வனவு செய்த வாகனத்தை தூக்கிச் சென்றவர்கள் நாளை நீ எவ்வாறு திருமணம் முடித்தாய் எனக் கேட்டு என்னுடைய மனைவியையும் தூக்கிச் செல்லமாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்லாட்சி கடந்த கால விடயங்களை தூக்கிப் பிடித்துக் கொண்டு இன்று அனைவரையும் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு இழுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE