நாம் இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர்கள் அதனால் இழப்புகளை சந்தித்தவர்கள்-பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன்

273

நாங்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் இந்த குடியிருப்பில் இருக்கின்ற அனைவரும் இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர்கள் அதனால் இழப்புக்களை சந்தித்தவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.

அண்மையில் கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தொடர்பில் கேட்டறியும் முகமாக பன்னங்கண்டி பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-2

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

இந்த பன்னங்கண்டி கிராமம் 1995ஆம் ஆண்டு மேஜர் கமல் அண்ணாவின் பெயரைத்தாங்கிய சுந்தரராஜன் குடியிருப்பாக உருவாகியது அவ்வாறு உருவான முதல் நாள் நிகழ்வில் நான் ஒர் அறிவிப்பாளராக இருந்தேன்.

என்னால் அதை மறக்க முடியாது. உண்மையில் உங்களுக்கு காணிப்பிரச்சினை இருப்பது எனக்கு நன்கு தெரியும் உங்களுக்கு இந்த காணி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று நானும் பல வழிமுறைகளில் முயற்சிகளை மேற்கொண்டேன்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-3

ஆனால் அது உங்களில் பலருக்கு தெரிந்திருக்காது ஏன் எனில் மற்றையவர்களை போல இதை பறைசாற்றிக் கொண்டு திரிபவர்கள் நாங்கள் அல்ல. ஆனால் இடையில் இந்த கிராமத்திற்கு பலர் வருகை தந்து அப்படி செய்வேன் இப்படி செய்வேன் என்று கூறிவிட்டு தங்கள் சுயலாபங்களை அனுபவித்து போனார்கள்.

அதற்கு இங்குள்ள சிலரும் உதவியாக இருந்தார்கள் என்பது வேதனையானது. நாங்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் இந்த குடியிருப்பில் இருக்கின்ற அனைவரும் இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர்கள்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-4

அதனால் இழப்புகளை சந்தித்தவர்கள் ஆகவே உங்களை அரசியல் பகடைக்காய்களாக பயன்பட அனுமதிக்க முடியாது. எங்கள் இனத்தின் வரலாற்றையும் தனித்துவத்தையும் தமிழர்களாகிய நாங்கள் இழந்துவிடக்கூடாது.

உங்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் நான் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி மிக விரைவாக தீர்க்கக்கூடிய வழிமுறையை ஏற்படுத்தி தருவேன் எனவும் பாராளமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6

 

SHARE