நாம் குடிக்கும் பால் சத்தானதா?

230
முன்பு எல்லாம் வீட்டுக்கு ஒரு மாடு இருக்கும், அதில் கிடைக்கிற பாலை குடும்பத்துக்கும், மீதமுள்ள பாலை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து விடுவோம். ஆனால் இப்போது நாம் கடையில் வாங்கும் பால் எங்கு எந்த வகையான மாடு, ஒரு மாட்டு பாலாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.

என்ன கிடைக்கிறதோ அதையே சத்தானது என்று நினைத்து குடித்து வருகிறோம். உண்மையில் நமக்கு கிடைப்பது சத்தான பால் தானா என்பதை பார்ப்போம்.

மாட்டிற்கு தரப்படுவது என்ன:

பலரும் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக பால் தட்டுபாடு ஏற்படும் சூழல் மிக விரைவில் நடப்பதுக்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் மாட்டிற்கு உணவாக சமைக்க பயன்படுத்தும் சோளம் மற்றும் சோயா கொடுக்கப்படுகின்றன.

அதுமட்டுமல்லாது தடுப்பூசி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புகள் மாட்டின் உடலில் செலுத்துகிறார்கள். இதனால் நோய் தொற்று ஏற்படமால் இருக்கும். பால் உற்பத்தி செய்ய அதன் உடலில் ஹார்மோன்ஸ் செலுத்தப்படுக்கிறது.

இதனால் மாட்டிற்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது, ஆனால் அதன் பாலை உட்கொள்ளும் நம் போன்றவர்களுக்கு தான் பிரச்சனை. அதிலும் சிறு வயதிலே பெண்கள் இதனால் சடங்காவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. உடல் பருமன், ஆண்டிபயாடிக் எதிர்ப்பு, சர்க்கரை நோய் போன்றவையும் இதில் அடங்கும்.
பதப்படுத்தப்பட்ட பாலை விட கறவை பால் நல்லது:
கறவை பால் நேரடியாக நாம் சென்று வாங்குவது நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். அதுமட்டுமல்லாது அதில் புரோட்டின், புரதசத்துக்கள் நிறைந்துள்ளது. நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்திருக்கின்றது.

ஆனால் பதப்படுத்தப்பட்ட பாலில் கேல்சியம் சத்துகள் இருக்காது, செரிமான கோளாறுகள் ஏற்படும், நல்ல பேஃக்டீரியாவை அழித்து விடும்.  உடலில் மெக்னிஷ்யத்தை முற்றிலுமாக கரைத்து விடும். இதை பருகினால் விரைவில் நம் உடல் பயனற்றதாக ஆகிவிடும். எந்தவித நல்ல சத்துக்களும் இதில் இல்லை.

அமிலத்தையும், கொழுப்பையும் தரவல்லது:

பதப்படுத்தப்பட்ட பாலில் அமிலம் அதிகமாக இருக்கும். அதில் உள்ள நல்ல கொழுப்பை உரிஞ்சு கெட்ட கொழுப்பையே நாம் அன்றாடம் குடிக்கின்றோம். இதனால் நம் உடலில் வயிற்று பகுதியில் அதிக அளவு சதை போடும்.
தயிர் பாலை விட சத்தானது, தயிர் மற்றும் பால் இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது, பால் புளிக்கவைக்கப்படும் போது அது அமைப்பை மாற்றி எளிதில் செரிக்க வைக்கிறது. தேநீர் அல்லது இனிப்புக்குச் செலுத்தும் ஒரு சிறிய பால் பிரச்சனை அல்ல, ஆனால் அது அதிக அளவில் உட்கொண்டால் பிரச்சனை நம் உடலுக்கே.

பாலுக்கு இருக்கிறதா மாற்று:

பால் இல்லையென்றால் அந்த சத்துக்கு இணையாக நம் உடலில் சேர்ப்பதற்கு வேறொன்றும் மாற்றாக இருக்கும் என்பது சந்தேகம் தான். பாதாம் பால், அரிசி பால், சணல் பால், முந்திரி பால் அல்லது தேங்காய் பால் அனைத்தயும் சேர்த்தால் கூட பாலின் சத்துக்கு நிகர் கிடையாது. பால் கலப்படம் கலந்து நமக்கு கிடைக்கிறது என்று உணர்ந்தால் நம்பகமான இடத்தில் இயற்கையாக மாட்டின் கறவையில் இருந்து பெற்று சாப்பிடுவதே நமக்கும் நம் உடலுக்கும் நல்லது சத்தானதும் கூட.
SHARE