நாய்கள் குரைப்பதனால் மலை சரிந்து விடாது: விஜயதாச ராஜபக்ச

300
நாய்கள் குரைப்பதனால் மலைகள் சரிந்து விடாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சிலர் என்னை பதவியிலிருந்து நீக்க முயற்சிக்கின்றனர்.

எனது அமைச்சுப் பதவியை பறிப்பதே அவர்களின் நோக்கமாக அமைந்துள்ளது.

தனிப்பட்ட குரோதத்தின் அடிப்படையில் பழி தீர்த்துக் கொள்ளவே இவ்வாறு முயற்சிக்கப்படுகின்றன.

நாய்கள் குரைப்பதனால் மலைகள் சரிந்து விடாது.

யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒவ்வொரு நபர்களின் வெற்று கருத்துக்களுக்கு செவிமடுக்க மாட்டார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் சம்பவத்துடன் நீதி அமைச்சருக்கும் தொடர்பு உண்டு எனவும் அவரையும் பதவி விலக்க வேண்டுமெனவும் சில தரப்பினர் கோரி வருகின்றமை குறித்து கொழும்பு ஊடகமொன்று தொலைபேசி மூலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE