நால்வர் கொலையில் குற்றவாளியை கண்டுபிடித்த பொலிசாருக்கு ரூ.1.47 கோடி சன்மானம்

312

சுவிட்சர்லாந்து நாட்டில் நான்கு பேரை கொலை செய்த குற்றவாளியை தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்துள்ள பொலிசாருக்கு 1.47 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rupperswil என்ற நகரில் கடந்த டிசம்பர் 21ம் திகதி 48 வயதான தாயார், அவருடைய 19 மற்றும் 13 வயதான இரு மகன்கள் மற்றும் மூத்த மகனின் 21 வயதான காதலி ஆகிய 4 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

சுவிஸ் நாட்டையே அதிர வைத்த இந்த கொலையை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் திணறி வந்துள்ளனர்.

பின்னர், ‘குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவருக்கு 1,00,000 பிராங்க்(1,47,95,637 இலங்கை ரூபாய்) சன்மானம் வழங்கப்படும் என ஆர்கவ் மாகாண அரசு அறிவித்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று 4 பேரை கொலை செய்த 33 வயதான நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

இது தொடர்பாக நேற்று ஆர்கவ் மாகாண சட்ட அமைச்சரான Urs Hofmann நேற்று பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது, ‘ 4 பேரை கொலை செய்த குற்றவாளி இறுதியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை எடுத்த 40 பொலிசாரையும் பாராட்டுகிறேன்.

கொலையாளி பற்றி தகவல் கொடுப்பவருக்காக அறிவிக்கப்பட்ட 1,00,000 பிராங்க் சன்மானத்தை 40 பொலிசாருக்கும் வழங்கப்படும்’ என சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

SHARE