நாளை என்ன படம் ரிலீஸ்

325

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வெளியாகும் சினிமாவின் ரிசல்ட் பொறுத்துதான் நடிகர், இயக்குனர்களின் எதிர்காலம் அமைகிறது.

அந்த வகையில் நாளையும் 5 படங்கள் ரிலீஸாகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் ரிலிஸாகவில்லை. ஆனால் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் முதன்முறையாக தமிழ், தெலுங்கில் வெளியாகும் ஸ்ரீமந்துடு படம் தமிழில் செல்வந்தன் என்ற பெயரில் ரிலிசாகவுள்ளது.

அதேபோல பரதேசி படத்திற்கு பிறகு அதர்வா கிராமத்து வேடத்தில் நடிக்கும் சண்டிவீரன் படம் வெளியாகவுள்ளது. பாலா தயாரித்துள்ள இப்படத்தை சற்குணம் இயக்கியுள்ளார்.

அடுத்து ஒரு பெண்ணை மூன்று பேர் காதலிப்பது போன்ற கதையம்சத்துடன் கூடிய குரங்கு கைல பூமாலை என்ற படம் ரிலிசாகவுள்ளது. கோலிசோடா நாயகி சாந்தினி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் புதுமுக நடிகர்கள் நடித்துள்ள கலைவேந்தன், வந்தா மல படங்களும் நாளை ரிலிசாகிறது.

SHARE