இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை சிலங்கா வருகின்றார்.
நாளை சனிக்கிழமை வரை கொழும்பில் தங்கியிருக்கும் சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதேவேளை வெளிவிவகார அமைச்சில் நாளை சனிக்கிழமை காலை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் சிறிலங்கா மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்விலும் இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சிறிலங்கா விஜயத்தின்போது இரண்டு நாடுகளுக்கு உறவை பலப்படுத்துவது தொடர்பாகவும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் குறித்த ஏற்பாடுகளையும் சுஷ்மா சுவராஜ் ஆராயவுள்ளார்.