தமிழ் சினிமாவில் நம்பர்1 பாடலாசிரியராக இருந்தவர் நா.முத்துக்குமார். இவரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவரது மரணத்திற்கு காரணம் குடி தான் என சிலர் கூறுகின்றனர். அதேபோல மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் இறந்து போனார் எனவும் கூறப்படுகிறது. இது இரண்டுமே உண்மையில்லை என்று அவரின் நண்பராக இருந்த பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளார்.
அவரின் சில செக்குகள் பணமில்லாமல் திரும்பி வந்தது உண்மைதான், ஆனால் பூதாகரமான அளவில் இல்லை. ஒரு சில தயாரிப்பாளர்களுக்கு உண்மையிலேயே கொடுக்கமுடியாத சூழ்நிலை உருவாகியிருக்கும் என்றார்.
இன்னும் இரண்டு வருடத்திற்கு அவர் எழுதிச்சென்ற பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளார்.