நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் முன்பு இருந்தது போல இப்போது அவருக்கு வாய்ப்புகள் வருவது இல்லையாம். ரங்கஸ்தலம் போன்ற படங்கள் திருமணத்திற்கு பிறகு வெளிவந்து ஹிட் ஆனாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் வருவதில்லை. என்னை வைத்து என்ன செய்வது என தெரியாமல் இயக்குனர்கள் முடிவெடுத்துவிட்டார்கள் போல உள்ளது.
மேலும் “ஆரம்பகாலத்தில் என் மீது வந்த ட்ரோல் பற்றி பேசிய அவர், அப்போது அதை பார்த்து எனக்கு பைத்தியம் பிடிப்பது போல இருக்கும். காலையில் எழுந்ததும் என்னை பற்றி வந்த ட்ரோல் மீம்களை பார்த்து டென்ஷன் ஆகிவிடுவேன். அந்த நாளே எனக்கு மோசமாகத்தான் இருக்கும். பின்னர் படிப்படியாக இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வந்துவிட்டேன். அது எப்படி என எனக்கே தெரியவில்லை” என சமந்தா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்துவரும் அவரிடம் பாலிவுட் செல்வீர்களா என கேட்டதற்கு “நிச்சயம் போக மாட்டேன்” என கூறியுள்ளார்.