நிதி திரட்டும் அரினா கிராண்டி, ஜஸ்டின் பீபர்

266

மான்செஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதலில் பாதிப்படைந்தோருக்கு நிதி திரட்டும் பொருட்டு அரினா கிராண்டி மற்றும் ஜஸ்டின் பீபர் ஆகியோர் தலைமையில் இசைக் கச்சேரி ஒன்று நடைபெறவுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி மான்செஸ்டர் நகரில் அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியின்போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. குறித்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி சல்மான் அபேதியின் குடும்பத்தினர் மற்றும் இந்த தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் 16 பேரை இதுவரை கைது செய்து பிரித்தானிய பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View image on Twitter

இதில் அவருக்கு நெருக்கமான இசைத்துறை நண்பர்களான பிரபல பாப் இசைக் கலைஞர்கள் Katy Perry, Miley Cyrus, Pharrell Williams, Take That, Coldplay, Justin Bieber, Usher, Niall Horan உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளும் இந்த இசைக் கச்சேரி ஓல்டு ட்ரஃபோர்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மட்டுமின்றி மான்செஸ்டர் கச்சேரியின்போது கலந்துகொண்ட ரசிகர்களுக்கு ஓல்டு ட்ரஃபோர்டு கச்சேரியில் இலவச அனுமதியும் வழங்க பாடகி அரினா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE