நிதி திரட்டும் ரொனால்டோ

114

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9500-ஐ நெருங்கியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் உலக நாடுகளில் இருந்து உதவிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது. பெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து உலகமும் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறது. இந்நிலையில் துருக்கி நிலநடுக்கத்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையொப்பமிடப்பட்ட ஜெர்சியை ஏலத்திற்கு வழங்கியுள்ளார் என துருக்கி கால்பந்து வீரர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

துருக்கி கால்பந்து வீரர் மெரிஹ் டெமிரல் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ரொனால்டோவுடன் பேசினேன், துருக்கியில் நடந்த சம்பவங்கள் மிகுந்த வருத்தமளிப்பதாக சொன்னதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையெழுத்திட்ட ஜெர்சியை ஏலத்தில் வழங்குவதாக அறிவித்தார். அதன் மூலம் கிடைக்கும் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

maalaimalar

SHARE