கிளிநொச்சி பரந்தன் றோமன் கத்தோலிக்க பாடசாலை முன்பாக இன்று அதிகாலை 01.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி விபத்தில் கப் ரக வானம் ஒன்றே தடம்புரண்டுள்ளதுடன் வாகன சாரதி சிறுகயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
சாரதியின் நித்திரை கலக்கம் காரணத்தினாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த எம்.கே.ஐ.பரந்தா (வயது 26) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவந்துள்ளனர்.