நிமால் சிறிபால டி சில்வா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது வரவேற்கப்பட வேண்டியது! ஹரின்

262

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது வரவேற்கப்பட வேண்டியது என டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஊடகவிலயாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதனை நான் மிகவும் விரும்புகின்றேன்.

நிமால் சிறிபால டி சில்வா பதுளை மாவட்டத்திற்கு பாரியளவில் சேவையற்றியுள்ளார். எனவே, அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதனை நான் விரும்புகின்றேன்.

எனினும், நிமால் சிறிபால டி சில்வா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார் என நான் நினைக்கவில்லை.

தனிப்பட்ட ரீதியில் எம் இருவருக்கும் இடையில் எவ்வித மனக் கசப்புக்களோ முரண்பாடுகளோ கிடையாது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE