நிமிடங்களில் நடந்த கொடூர விபத்து…400க்கும் மேற்பட்டோர் பலி: சீன கப்பல் விபத்து (வீடியோ இணைப்பு)

366

 

சீனாவில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 400 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது 2ஆம் திகதி கடும்புயலில் சிக்கி ஹூபி பகுதியில் உள்ள யாண்ட்சே நதியில் மூழ்கியது.

3 4 chnaship_accidnet_004

கப்பலில் 410 பயணிகளும், 48 ஊழியர்களும் பயணம் செய்துள்ளார்கள்.இந்த தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று கடுமையாக போராடி கப்பலின் உள் அறைகளில் இருந்த 40 பேர் வரை மீட்டனர்.

எனினும் மீதயுள்ளவர்களை மீட்க முடியாத அளவுக்கு கப்பல் மூழ்கியது. இதனால் அதில் உள்ளவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

மீட்புப் பணியில் 3,000த்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். எனினும் ஒன்றிரண்டு உடல்கள் தான் சிக்கியுள்ளன. இந்த விபத்து குறித்து கப்பல் தளபதி கூறியதாவது, இந்த கொடூர விபத்து ஒரு சில நிமிடங்களில் நிகழ்ந்து விட்டதாகவும் அதற்கான காரணம் என்ன என்பதை உணர முடியவில்லை.

எனினும் திடீரென வீசிய சூறாவளி தான் காரணமாக இருக்கலாம் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.

சீனாவின் யாங்ட்சி நதியில் நடைபெற்ற விபத்துகளில் இது தான் மிகவும் மோசமான விபத்து என சீன அரசு தெரிவித்துள்ளது.

SHARE