நியமனங்களை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப் பெறப்பட்டுள்ளது!!!

128

மஹரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரின் நியமனங்களை ரத்து செய்யுமாறு  கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப் பெறப்பட்டுள்ளது.

மஹரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரும் அந்த நகர சபை பிரிவுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்றும், திவுலபிட்டிய, படல்கம மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த அவர்களுக்கு உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் படி மஹரகம நகர சபையின் உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகுதி இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு, மஹரகம நகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த இன்று வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

SHARE