நியூசிலாந்தின் சமூக ஆர்வலர் செயற்பாட்டாளர் தமிழ் பற்றாளர் ஆறுமுகம் தேவராஜன் காலம் ஆனார்

225

நியூசிலாந்தின் சமூக ஆர்வலர், செயற்பாட்டாளர், தமிழ் பற்றாளர்  ஆறுமுகம் தேவராஜன் காலம் ஆனார்.  நியூஸிலாந்து தமிழ் மூத்த பிரசைகள் சங்கத் தலைவராக இருந்த ஆறுமுகம்  தேவராஜன் தமிழ் புலம்பெயர் அகதிகள் தொடர்பாக குரல் கொடுத்து வந்தவர்.

தமது தள்ளாத வயதிலும் தமிழர் உரிமை பற்றியும் புலம் பெயர் தமிழரின் வதிவிடக் கோரிக்கை தொடர்பாகவும் குறிப்பாக அகதி அந்தஸ்து கோரிக்கை விடுப்பவர்கள் விடயங்களில் நியூ சீலந்து அரசு முதல் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வரையில்  தமது மின்னஞ்சலை என்றும் இணைத்தபடி நாடோறும் தமது பணியைச் செய்து வருபவர் தேவராஜன் .அதை விடவும்  பல தமிழ் அமைப்புகளின் பெயரில் பல சமூக நிறுவனங்களைலைத் தாமே  உருவாக்கி அவற்றின் மூலமும் ஈழத்தமிழர் விவகாரங்கள் மனித உரிமைகள் தொடர்பான சந்திப்புகளை நடத்தி அவற்றின் பெறுபேறுகளை உரியவர்களுக்கு அடிக்கடி அனுப்பி வருபவர் .ஆங்கிலம் தமிழ் ஆகியவற்றில்  தேர்ச்சி மிக்க இவர் தொல்லியல் அரசியல்  தொடர்பாக பரந்த அறிவினைப் பெற்றவர் . என்பது குறிப்பிடத்தக்கது.
.
ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான புலோலியைச் சேர்ந்த 82 வயதான தேவராஜனுக்கு நியூசிலாந்தில் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய சேவை பலராலும் பாராட்டப்பட்டது. 1997ம் ஆண்டு முதல் தேவராஜன் நியூசிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

இலங்கையில் வாழ்ந்த காலங்களிலும் மிகவும் சமூக அரசியற் செயற்பாடுகளில் குறிப்பாகத் தொல்லியல் ஆய்வுச் செயற்பாடுகளிலும் அது தொடர்பான மாநாடுகளை நடத்துவதிலும் பங்கு வகிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.

இந்திய வெளியுறவுச்செயலாளர்களாகத் திகழ்ந்த கே பி எஸ் மேனன் ஏ பி வெங்கடேஸ்வரன் போன்றவர்களுடன் வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட்டவர் இவர். தமிழர் விவகாரங்கள் தொடர்பாக இவர்களுடன் தீர்க்கமாக உரையாடியவர்.

தமிழாய்வு விடயத்தில் அறிஞர் தனிநாயகம் அடிகளாரால் ஈர்க்கப்பட்ட இவர் தமிழாய்வு முயற்சிகளில் தொல்லியல் சார் செயற்பாடுகளில் பல ஆலோசனை உதவிகளை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது இவரது தொல்லியல் ஆளுமை இந்திய அறிஞர்கள் பலருடன் பிணைத்து நின்றதுடன் அவர்களால் ஆகர்ஷிக்கப்பட்டதாகவே இறக்கும் வரை இருந்தது.

SHARE