நியூசிலாந்தில் சந்தேகத்திற்குரிய வெடிபொருள் உடன் ஒருவர் கைது

220

நியூசிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் சந்தேகத்திற்குரிய வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெடிபொருள் இருந்த இடத்தைச் சுற்றி மக்களை அணுகவிடாமல், அதிகாரிகள் அதை அப்புறப்படுத்தினர்.

சம்பவம் தொடர்பாக 33 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் தற்போது இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

கடந்த மாதம் இரண்டு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து கிரைட்சர்ச் நகர் தொடர்ந்து உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

SHARE