நிரந்தர நியமனம் கோரி புகையிரத பாதுகாப்பு கடவை ஊழியர்கள் போராட்டம்

405

 

 

நிரந்தர நியமனம் கோரி புகையிரத பாதுகாப்பு கடவை ஊழியர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட புகையிரதக் கடவைகளின் பாதுகாப்பு ஊழியர்களாக நிரந்தர

நியமனம் இன்றி கடமையாற்றுபவர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்கக் கோரி

வவுனியா புகையிரத நிலையம் முன்பாக இன்று (09-04-2015) வியாழக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

unnamed (2) unnamed (3) unnamed (4)

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க வவுனியா கிளையும் வவுனியா மாவட்ட

புகையிரத கடவை பாதுகாப்பு ஊழியர்களும் இணைந்து இந்தப் போராட்டத்தை

மேற்கொண்டனர்.

வவுனியா மாவட்ட புகையிரத காப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜெ.றொகான்

தெரிவிக்கையில்

புகையிரத சேவை விஸ்தரிக்கப்பட்ட போது ஆறு மாத காலப்பகுதிக்குள் எம்மை

நிரந்தரமாக்குவதாகத் தெரிவித்து பொலிஸாரால் நாம் கடமையில்

ஈடுபடுத்தப்பட்டோம். ஆனால் இன்று 20 மாதங்கள் கடந்த நிலையிலும் எமக்கு

நிரந்தர நியமனம் எதுவும் வழங்கப்படவில்லை. மாதாந்தம் 7ஆயிரத்து 500

ரூபாய் கொடுப்பனவே வழங்கப்பட்டு வருகிறது. இது எமது சாப்பாட்டுச் செலவுக்கே

போதியதாகவில்லை. இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் போக்குவரத்து

அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலம் பலமுறை தெரிவித்த போதும் நியமனம்

வழங்குவதாக வாக்குறுதி தந்தார்கள்களே தவிர நியமனம் வழங்கவில்லை. எனவே எமக்கு

நிரந்தர நியமனத்தை இந்த புதிய அரசாங்கம் வழங்க வேண்டும் என போராட்டத்தில்

ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘நிரந்தர நியமனம் வேண்டும்’, ‘7,500

ரூபாய் சம்பளத்துக்கு நாங்கள் என்ன அடிமைகளா?’, ’20 மாதம் கடந்து விட்டது இனியும்

காலம் கடத்தாதே’, ‘புதிய ஜனாதிபதியே இது உங்களின் கவனத்திற்கு…’ என எழுதப்பட்ட

சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

SHARE