ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகரத்தை ரத்து செய்யும் நோக்கில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்று அதிகாரத்தை செய்வது குறித்த யோசனை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார்.
இந்த யோசனைக்கு பூரண ஆதரவளிப்பது என ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
நிறைவேற்று அதிகரத்தை ரத்து செய்யும் நோக்கில் புதிதாக அரசியல் அமைப்பு ஒன்ற உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
அமைச்சரவை அமைச்சர்கள் கருத்து சுதந்திரத்தை நிதானமாக பயன்படுத்த வேண்டும்: ஜனாதிபதி
அமைச்சரவை அமைச்சர்கள் கருத்துச் சுதந்திரத்தை நிதானமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்கள் கருத்து வெளியிடும் போது கருத்துச் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தி நிதானமாக கருத்து வெளியிட வேண்டும்.
அமைச்சர்கள் நிதானமாக கருத்து வெளியிட்டால் மட்டுமே தொடர்ந்தும் சுமூக நிலைமையை பேண முடியும்.
தற்போது நாட்டில் நிலவி வரும் சுதந்திரமான சூழ்நிலையை பயன்படுத்தி அமைச்சரவை அமைச்சர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
நான் இருபது தடவைகள் பல்வெறு அரசாங்கங்களின் கீழ் அமைச்சுப் பதவி வகித்திருக்கின்றேன்.
அந்த அரசாங்கங்களின் கீழ் பதவி வகித்த அமைச்சர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் கருத்து வெளியிட்டார்கள் என்பது பற்றி நான் நன்கு அறிவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமரும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.