நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முiறைமயை ரத்து செய்வது குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனமொன்று தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மாதுலுவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதாக அறிவித்திருந்தார்