ஜனாதிபதிக்கு தெரியாமல் நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்திற்கு இணங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிலக்கண்ணி வெடி தடை குறித்த சர்வதேச ஒப்பந்தத்திற்கு இணங்குவதற்கு முன்னதாக பாதுகாப்பு தரப்பின் ஆலோசனை எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சர்வதேச உடன்படிக்கைக்கு இணங்க முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அறிவிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார்.
இந்த ஒட்டாவா பிரகடனம் காரணமாக இராணுவ முகாம்களை பாதுகாக்கும் நோக்கிலும்
நிலக்கண்ணி வெடிகளை புதைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரகடனத்திற்கு இணங்கப்பட்ட போதிலும் இதுவரையில் இலங்கை அதற்கு இணங்கவில்லை
எனத் தெரிவிக்கப்படுகிறது.