நிலநடுக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 12 பேரை பிரிடா என்னும் நாய் மீட்டு நெகிழ வைத்துள்ளது.

210

மெகஸிக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 12 பேரை பிரிடா என்னும் நாய் மீட்டு நெகிழ வைத்துள்ளது.மெக்சிகோவில், கடந்த சில தினங்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீட்பு பணியின் போது, பிரிடோ என்னும் 6 வயது நாய் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க உதவியது,இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புத்துறையினர் மேற்கொண்டனர். இதில் பிரிடோவின் பங்கு அளப்பறியது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்ட 12க்கும் மேற்பட்டவர்களின் இருந்த இடத்தை காட்டி அவர்களை மீட்க உதவியது பிரிடோ நாய் தான்.

இதுவரை பல இயற்கை பேரழிவில் சிக்கிய 52 பேரை பிரிடோ மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது பிரிடோ நாய், மீட்பு பணியில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

SHARE