நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது சீனாவின் `Chang e 5` லேண்டர் !

404

சீனாவின் ஆராய்ச்சி விண்கலமான சாங் இ-5 ( Chang’e 5 mission) லேண்டரானது திட்டமிட்டபடி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக, தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 24ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்ட இவ்  விண்கலம், சனிக்கிழமை அன்று நிலவின் நீள்வட்டப்பாதைக்குள் நுழைந்ததை தொடர்ந்து, படிப்படியான நடவடிக்கைகள் மூலம் லேண்டர் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த  லேண்டரானது 2 கிலோ மீற்றர் வரையில் நிலவின் மேற்பரப்பில் துளையிட்டு, மாதிரிகளை சேகரித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் எனக் கூறப்படுகிறது.

1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர்  நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு, பூமிக்கு திரும்பும் முதல் விண்கலம் சீனாவின் சாங் இ-5 ஆக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE