நிலவிலிருந்து பாறைத் துணுக்குகளை எடுத்து வர சீனா திட்டம்!

340

நிலவிலிருந்து பாறைத் துணுக்குகளை எடுத்து வர சீனாவின் சாங்-5 என்ற விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

நிலவிலுள்ள புயல்களின் பெருங்கடல் என அழைக்கப்படும் எரிமலைச் சமவெளியில் இருந்து பாறைகளைத் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியிலிருந்து 2 கிலோகிராம் எடை கொண்ட பாறை, மண் துகள்களைச் சேகரித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை யாரும் சென்றடையாத பகுதி என்பதுடன், இந்த முயற்சி வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த நாடாக சீனா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE