‘2030 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்கை அடைந்து கொள்ளல்’ எனும் தொனிப்பொருளில் தயாரிக்கப்பட்ட நிலையான தேசிய அபிவிருத்தி கொள்கைத் திட்டம் இன்று வௌியிட்டு வைக்கப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
தேசிய நிபுணர் குழுவினரால் தயாராக்கப்பட்ட, நிலையான தேசிய அபிவிருத்தி கொள்கைத் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையரிடையே காணப்படும் கருத்துக்கள் மற்றும் திறன்களை அடிப்படையாகக்கொண்டு எதிர்வரும் 12 வருடங்களுக்கு நாட்டில் முன்னெடுக்கக்கூடிய நீண்டகால பொருளாதார மற்றும் சமூக, சூழல் அபிவிருத்தி நோக்குகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆகியோரை இலக்குவைத்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.