எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களினால் இந்த நிழல் அமைச்சரவை உருவாக்கப்பட உள்ளது.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை நிழல் அமைச்சரவையின் ஊடாக மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றின் 8ம் இலக்க அறையில் கூடிய இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிழல் அமைச்சரவை அமைப்பது குறித்து தீர்மானித்துள்ளனர்.
மக்களுக்கான எதிர்க்கட்சி என்ற பெயரில் எதிர்காலத்தில் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான எதிர்க்கட்சியின் தலைவராக தினேஸ் குணவர்தனவும், இந்த எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக டலஸ் அழப்பெருமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சுக்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நிழல் அமைச்சரவை உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சுக்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து கவனம் செலுத்தி அது குறித்து அம்பலப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க நிழல் அமைச்சர்கள் முயற்சிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.