இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணங்களுடன் பங்களாதேஷ் விமானமொன்று சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளது.
மருந்துகள் மற்றும் குடிநீர் என்பன குறித்த விமானத்தின் மூலம் கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றது.
குறித்த நிவாரணங்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாகிஸ்தானிலிருந்து நேற்று கிடைக்கப்பெற்ற நிவாரணங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.