நிஷா – ஒஸ்ரின் சந்திப்பு; ஊடகவியலாளர்களுக்கு கதவடைப்பு

219

அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியான தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்த நிஷா பிஷ்வால், காலை 9.45 அளவில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து 12.45 அளவில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவின் இல்லத்திற்கு சென்று ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளார்.

எனினும் ஆளுநருடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பங்களாதேஷுக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்காவை வந்தடைந்த நிஷா பிஷ்வால், தனது விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று கம்போடியாவிற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

nesa

SHARE