நீங்கள் பந்துவீசியதிலேயே கடினமான பேட்ஸ்மேன் யார்? இலங்கை ஜாம்பவான் முரளிதரன் பதில்

140

 

நான் பந்து வீசியதிலேயே சேவாக் தான் மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன்
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன்.

இவர் கடந்த சனிக்கிழமையன்று SB கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது தன்னுடைய கிரிக்கெட் பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.

அப்போது கிரிக்கெட்டில் தான் போற்றும் வீரர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ்(Viv Richards) என தெரிவித்தார்.

மேலும் “தூஸ்ரா”(doosra) பந்துவீச்சு முறையின் அடிப்படையை எனக்கு கற்றுக் கொடுத்தது பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் (Saqlain Mushtaq) என்று முத்தையா முரளிதரன் வெளிப்படையாக பேசினார்.

இந்நிலையில் மாணவர் ஒருவர் நீங்கள் பந்து வீசியதிலேயே யார் கடினமான பேட்ஸ்மேன் என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முத்தையா முரளிதரன், இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தான் என பதிலளித்தார்.

SHARE