நீங்க யாரும் பயப்படாதீங்க! கண்ணீர் மல்க நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

279

தமிழகத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்களை பொலிசார் வலுக்கட்டாயமாகவும், தடியடி நடத்தியும் வெளியேற்றி வருகின்றனர்.

மெரீனாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களும் ஒன்றுதிரண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசிய வீடியோவில், எனக்கு 6 மணிக்கு தான் விடயம் தெரியவந்தது.

உடனடியாக தொலைக்காட்சியை ஆன் செய்து பார்த்தேன், மெரீனாவுக்கு செல்லும் வழியை பொலிசார் அடைத்துள்ளனர்.

எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் என்னை விட மறுக்கிறார்கள், நீங்க யாரும் பயப்பட வேண்டாம்.

தயவுசெய்து தண்ணீருக்குள் யாரும் இறங்க வேண்டாம், நமது உயிர் நமக்கு முக்கியம், எப்படியாவது நான் அங்கு வந்துவிடுவேன் என தெரிவித்துள்ளார்.

  • January 23, 2017
  • 17 minutes ago
  • January 23, 2017
  • 19 minutes ago

சென்னையில் திருவல்லிக்கேணியில் போராட்டம் நடத்த முயன்றவர்கள் மீது பொலிசார் தடியடி

  • January 23, 2017
  • 20 minutes ago

சென்னையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சி- பல மாணவர்கள் காயம்

  • January 23, 2017
  • 42 minutes ago

சட்டசபை தொடங்கியவுடன் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

  • January 23, 2017
  • 48 minutes ago

தமிழகத்தில் சட்டசபை தொடங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் சட்ட முன்வடிவாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • January 23, 2017
  • 49 minutes ago

பட்டுக்கோட்டையில் போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக இளைஞர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

  • January 23, 2017
  • 49 minutes ago

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்கு உரியது- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு

  • January 23, 2017
  • 1 hour ago

சேலத்தில் போராட்டக்காரர்கள் வசம் இருந்த ரயில் மீட்கப்பட்டதுடன், காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

  • January 23, 2017
  • 1 hour ago

சேலத்தில் போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து செல்லுமாறு பொலிசார் அறிவுறுத்தல்

  • January 23, 2017
  • 2 hours ago

கோவை வஉசி மைதானத்தில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றம்

  • January 23, 2017
  • 2 hours ago

திண்டுக்கல் பழனியில் போராட்டக்காரர்கள் தானாகவே முன்வந்து வாபஸ் பெற்று கலைந்து சென்றுள்ளனர்.

  • January 23, 2017
  • 2 hours ago

மதுரை செல்லூரில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளவர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி பொலிசார் அறிவுறுத்தல்

  • January 23, 2017
  • 2 hours ago

தமிழகத்தில் போராட்டக்காரர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்- இளைஞர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

  • January 23, 2017
  • 2 hours ago

மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தி கொள்ளலாம். யாராலும் ஜல்லிக்கட்டை தடுக்க முடியாது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

  • January 22, 2017
  • 23 hours ago

திண்டுக்கலில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் தேவை என்றும் வலியுறுத்தினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது பொலிசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க. நிர்வாகிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் மக்கள் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் நிர்பந்திக்க… ஆவேசமடைந்த மக்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை கொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க.வினர் அறிவித்தனர்.

  • January 21, 2017
  • 2 days ago

ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் பிறக்கப்பட்டதற்கு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கட்ஜுவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பலர் ஜல்லிக்கட்டு தொடர்பாக சந்தேகம் கேட்டு வருகின்றனர்.

இதற்கு அவர், ‘அவசர சட்டம், தமிழக சட்டசபையில் நிறைவேறினால், அது நிச்சயமாக நிரந்தர சட்டமாக மாறிவிடும் எனவே யாரும் கவலைப்பட வேண்டாம் எனக்கூறியுள்ளார்.

  • January 21, 2017
  • 2 days ago

‘அங்காநல்லூரில் 350 காளைகள் பங்கேற்கும். மேலும், பார்வையாளர்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட எஸ்.பி தலைமையில் பாதுகாப்பு பணியில் 2,500 காவலர்கள் ஈடுபட உள்ளனர்.

அதேபோல், 15 சார் ஆட்சியர்கள் மற்றும் 10 வட்டாச்சியர்களும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

  • January 21, 2017
  • 2 days ago

அவசர சட்டம் கொண்டு வந்ததே நிரந்தர தீர்வு தான்- முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை செயலகத்தில் பேட்டி

  • January 21, 2017
  • 2 days ago

Once the Ordinance is made into an Act by the Tamilnadu Legislature, as it certainly will be, it will become a permanent law. So dont worry https://twitter.com/vijish999/status/822770887762046976 

  • January 21, 2017
  • 2 days ago

ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE