ஒரு நடிகையாக இருந்து தற்போது பிரித்தானிய அரச குடும்பத்தில் மருமகளாகியுள்ள மேகன் மெர்க்கல் திருமணத்திற்கு முன்னர் சுற்றுலா சென்ற இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் தெருவோரங்களில் இவர் மகிழ்ச்சியாக சுற்றி திரிந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது
திருமணத்திற்கு பின்னர் இவர் தனது கணவருடன் இணைந்து எங்கு சென்றாலும் அதுதொடர்பான புகைப்படங்கள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகும். ஆனால் திருமணத்திற்கு முன்னர், இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதுவரை காணாத புகைப்படங்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன.
மெர்க்கல் ஒரு சுற்றுலாபிரியை ஆவார், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது நண்பர்களுடன் இணைந்து தனக்கு பிடித்த இடங்களுக்கு சுற்றுலா சென்றுவிடுவார்.
ஜமைக்கா, நியூசிலாந்து மற்றும் க்ரீக் தீவுகளுக்கு இவர் சுற்றுலா சென்றபோது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இவரது ரசிகர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அந்த புகைப்படங்கள் அனைத்தும் 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளன, நீச்சல் உடையில் கடலில் குதிப்பது, கடல் அலையி தாவிக்குதிப்பது, தெருவோரங்களில் உற்சாகம் கொண்ட என பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த வருடம் இளவரசி மெர்க்கல் தனது கணவருடன் இணைந்து நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதா கூறப்படுகிறது.