நீண்ட கால வறட்சியின் பின் மட்டக்களப்பில் இடியுடன்கூடிய மழை..! மகிழ்ச்சியில் மக்கள்

228

நீண்ட நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சியான காலநிலை நீடித்து வந்த நிலையில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

மக்களின் அன்றாட தேவைகளுக்கு கூட நீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் இன்று பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாரி கால வேளாண்மைச் செய்கைக்குரிய காலங்கள் தள்ளிப் போகின்றமையல் கிராமங்களில் மழை வேண்டி கொம்பு கட்டி விளையாடும் ஆரம்ப கூட்டங்களுக்கான ஏற்பாடும் அங்காங்கே இடம்பெற்ற நிலையில் இன்றை மழையானது அவர்களுக்கும் நல்லதொரு செய்தியாக அமைந்துள்ளது.

அத்துடன், கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலையில், வறண்ட குளங்கள், நதிக்கரைகளைத் தான் மாவட்டத்தின் பல பகுதிகளில் காணக்கூடியதாக இருந்தது.

இவ்வாறான நிலையில் இன்று பெய்த மழையினைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஓரளவு மகிழ்ச்சியான நிலையை அவதானிக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6 625-0-560-320-160-600-053-800-668-160-90-7 625-0-560-320-160-600-053-800-668-160-90-8

 

 

 

SHARE