நீண்ட நாட்களுக்கு பிறகு களத்தில் இவர்

213

 

இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி-ரித்திகா சிங் இணைந்து நடிக்க உள்ள படத்தில் பிரபல நடிகை சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிப்பில் பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பித்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன் இப்படத்தில் பொலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

20 வருடங்களுக்குப் முன்பு வெளியான புதையல் படத்திற்கு பிறகு, இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி மீண்டும் நடித்து வருகிறார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நந்திதா சாந்தினி உள்ளிட்ட 3 நாயகிகள் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு வணங்காமுடி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் படக்குழு அதனை மறுத்துள்ளது.

முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் ,சுந்தர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

SHARE