இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் குறித்த விசாரணைக்காக உருவாக்கப்படவுள்ள பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் நீதித்துறை, சட்டத்துறை சார்ந்தவர்கள் காணப்படும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த கூடும் அதன் காரணமாகவே வெளிநாட்டு பிரசன்னத்தை எதிர்க்கின்றோம் என ஜே.வி;பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின்சில்வா இந்தியாவின் இந்து நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார். எங்கள் கட்சி எந்த விசாரணையையும் எதிர்க்கவில்லை ஆனால் அவை முழுமையான உள்நாட்டு விசாரணைகளாக அமையவேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய ராஜபக்ச அரசாங்கம் நீதித்துறையை எவ்வாறு பயன்படுத்தியது என்பதனை அடிப்டையாகவைத்தே தமிழ் மக்கள் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றனர்.
எனினும் புதிய அரசாங்கம் நீதித்துறையில் மாற்றங்களை மேற்கொண்டு வருவதால் நம்பகத்தன்மை மிக்க உள்நாட்டுபொறிமுறை சாத்தியம் என அவர் தெரிவித்துள்ளார்.