
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் தனிச்சிறை கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூரில் கடந்த சனிக்கிழமை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிரதான சந்தேகநபர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, நீதிவான் வீட்டில் முன்னிலைப் படுத்திய போது சந்தேகநபரை எதிர்வரும், 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், குறித்த நபர் யாழ். சிறைச்சாலையில், தனி அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை அவரது இரண்டாவது மனைவி சந்திதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வேறு யாரும் குறித்த நபரை சந்தித்து பேசவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.