நீதிப் பொறிமுறைகளுக்கு உட்பட்டே முப்படையினரும் செயற்பட்டனர் – ஜீ.எல். பீரிஸ்

168

g-l_-peiris_1

நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முப்படையினரும் சர்வதேச நீதிப் பொறிமுறைகளுக்கு உட்பட்டே செயற்பட்டுள்ளனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இராணுவத்தினர் ஒருபோதும் மனித உரிமைகளை மீறவில்லை, ஆனால் தற்போதைய நல்லாட்சி இராணுவத்தினரை குற்றவாளிகளாக சித்தரிப்பதாக குறிப்பிட்டார்.

இராணுவத்தினர் குற்றங்கள் செய்திருப்பதாகவும் இதை தாம் ஒப்புக் கொள்வதாகவும் நல்லாட்சி கூறிவருகின்றது.

“இவர்கள் குற்றம் செய்திருந்தால் தானே ஒப்புக் கொள்வதற்கு, குற்றமே செய்யாத நிலையில் இவர்கள் எவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொள்ள முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்று கூறப்படுகின்றது, இதற்கு முன்னரும் ஒரு இராணுவ அதிகாரி பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக்கு நட்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றால், போராளிகளால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு என்ன பதில்? இவர்களுக்கு நட்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா, என்றும் இதன்போது பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து இதில் கருத்து தெரிவித்த பந்துல குணவர்தன,

நாட்டில் தற்போது அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிப்படைந்திருப்பதாகவும், கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வீதி அபிவிருத்திகளுக்காக வேலையில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் தற்போது வீதியோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு பெரிதும் பாதிப்பாக உள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.

மேலும் புகைத்தல் தொடர்பான பொருட்களுக்கு 20 ரூபாவை வரியாக சேர்த்தால் இதிலிருந்து கிடைக்கும் வருமானங்களே ஏராளம்.

இதைக்கொண்டு அபிவிருத்தியை அடைய முடியும், ஜனாதிபதி இன்று நினைத்தால் கூட இந்த விடயம் சாத்தியப்படும். ஆனால் ஜனாதிபதி இதை செயற்படுத்துவாரா என பந்துல கூறினார்.

கடந்த கால கடனை அடைப்பதற்காகவே தற்போதைய நல்லாட்சி வரிகளை அதிகரித்துள்ளதாக கூறிவருகின்றது. ஆனால் இந்த அரசு வரியைக் கூட்டினாலும் வருமானம் 220 பில்லியனே உள்ளது. ஆனால் கடந்த காலத்தில் 275 பில்லியன் வருமானம் காணப்பட்டது. ஆகவே இந்த வரி அதிகரிப்பு என்பது பொருத்தமற்ற ஒன்று எனவும் குறிப்பிட்டார்.

SHARE