ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிற்கான கட்டணங்கள் செலுத்தப்படாமை குறித்த விவகாரம் தொடர்பாக மார்ச் 10 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவிற்கும் ஏனைய ஆறு பேரிற்கும் கொழும்பின் வர்த்தக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் சுசில்பிரேமஜயந்த,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பா,ஆகியோரிற்கும் இந்த உத்தரவு அனுப்பபட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின்போது பேருந்துகளிற்கு கட்டணங்கள் செலுத்தப்படாததன் காரணமாக 140 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது,