சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் இன்று எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ராம்குமார் கையெத்திட மறுத்துவிட்டார்.
கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க அனுமதி கிடைத்ததால் ராம்குமாரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி சுவாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்த உருவம், ராம்குமாரின் உருவத்துடன் பொருந்துகிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில், புழல் சிறை வளாகத்தில் ராம்குமாரை போலீசார் வீடியோ எடுத்தனர்.
சிறிது தூரம் நடக்க வைத்து வீடியோ எடுத்ததுடன், புகைப்படமும் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும் நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ராம்குமாரை ஆஜர்படுத்தினர்.
அப்போது, ராம்குமார் கையெழுத்திட மறுத்ததாகவும், சூளைமேட்டில் மேன்சன் விண்ணப்பத்தில் தான் கையெழுத்திடவில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.