ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, ஒரு தொகுதி ஆயுதங்கள், நேற்று புதன்கிழமை அழிக்கப்பட்டன. இந்த ஆயுதங்கள், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் சான்றாதாரங்கள் என்பதுடன் நிறைவடைந்த வழக்குகளுக்குரிய ஆயுதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இந்த ஆயுதங்கள் அழிக்கப்படவிருந்தன. எனினும், அவ்வாறு அழிக்கவேண்டாம் என்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவற்றை ஆழ்கடலில் கொட்டுவதற்கு, கடற்படையினரிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.